Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை எண் 17/25..... dt.09.04.2025

 AIBDPA TN சுற்றறிக்கை எண் 17/25..... dt.09.04.2025

ஓய்வூதியம் முழக்கம் மார்ச்-ஏப்ரல் 2025

தோழர்களே, 

     ஓய்வூதியம் முழக்கம் மார்ச்-ஏப்ரல் இதழுக்கான பணிகள் துவங்கியுள்ளன. இம்மாத இறுதிக்குள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும். 

ஜனவரி- பிப்ரவரி இதழ் பல மாவட்டங்களில் செயற்குழு கூட்டங்கள் மூலமாகவும் பொதுக்குழு கூட்டங்கள் மூலமாகவும் வெளியிட்டது மகிழ்ச்சியாக உள்ளது.  இன்னும் ஒரு சில மாவட்டங்கள் அந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 

                மாவட்டங்கள் சந்தா சேர்க்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள 7,200 உறுப்பினர்களில் நாலாயிரத்துக்கும் (4,000) மேற்பட்ட சந்தாக்கள் சேர்த்தால்தான்  நாம் இந்த பத்திரிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியும். 

அச்சிடும் செலவு,  

அஞ்சல் செலவு 

அதிகமாக உள்ளது. 

ஆகவே சந்தா சேர்க்கும் பணியினை தோழர்கள் உடனடியாக செய்ய வேண்டும். 

இதழுக்கான இதுவரை சந்தா சேர்த்த மாவட்டங்கள் சந்தாதாரர்களின் பெயர், விலாசம், தொலைபேசி எண் ஆகியவற்றை உடனடியாக மாநிலச் சங்கத்திற்கு அதற்கான பணத்தோடு அனுப்பி வைக்கவும். 

         மாவட்ட சங்கங்கள் தங்களது கிளைச் செயலரின் பெயர், விலாசம்,   தொலைபேசி எண், கிளை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மீண்டும் மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிவைத்தால் அடுத்த இதழ் கிளை செயலாளர்களுக்கு நேரடியாக அனுப்புவதற்கு உதவியாக இருக்கும். 

கடந்த இதழில் இதழ் விலை ரூபாய் 10 என்றும் 5 ஆண்டு சந்தா ரூபாய் 500 என்றும் அறிவித்திருந்தோம். தோழர்கள் ஒரு சில விளக்கங்களை கேட்டு இருக்கிறார்கள். 

10 ரூபாய் என்றால் 5 ஆண்டுக்கு (10×6×5=)300 ரூபாய் தானே? ஏன் 500 என்று சந்தேகங்கள் கேட்கப் பட்டிருக்கின்றது. 

தோழர்களே, 

இதை நாம் பத்திரி்க்கைகான நிதியை சேகரிப்பதற்கான ஒரு ஏற்பாடாக பார்க்கிறோம். 

கணிசமான நிதி சேர்ந்தால் இந்த இதழை  மாத இதழாகவும் நாம் கொண்டு வரலாம். அப்பொழுது இதழ் 10 ரூபாய் என்றால் கணக்கு சரியாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். 

ஆகவே தோழர்கள்  அந்த விஷயத்தை கணக்கிடாமல் ஐந்து ஆண்டு சந்தா 500 ரூபாய்  சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடுங்கள். 

 ஓய்வூதியம் முழக்கம் உங்கள் இல்லங்களில் முழங்குவதற்கு மாநிலச் சங்கம் நடவடிக்கை எடுக்கும். 

இதழ் சம்பந்தமான உங்களது கருத்துக்களை நேயர் கடிதமாக மாநிலச் சங்கத்திற்கு அனுப்பலாம். உங்களுடைய ஐயப்பாடு களையும் கேள்விகளாக மாநிலச் சங்கத்திற்கு அனுப்பலாம். இவற்றில் தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்து ஓய்வுதியம் முழக்கத்தில் வெளியிடப்படும். 

            சங்க இதழை மேலும் சிறப்பிக்க உங்கள் அத்தனை பேருடைய உதவியையும் மாநிலச் சங்கம் கோருகிறது. 

எனவே சந்தா சேர்க்கும் பணியை முனைப்பாக செயல்படுத்த வேண்டுமென மாநில சங்கம் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறது. 

தோழமை வாழ்த்துக்களுடன்
 R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
9.4.25

Post a Comment

0 Comments