AIBDPA TN சுற்றறிக்கை எண் 18/25*
மாநில மைய கூட்டம் 9.4.25
தோழர்களே,
நமது மாநிலச் சங்கத்தின் மாநில மைய கூட்டம் இன்று 9 4 25 அன்று நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் C.ஞானசேகரன் அவர்களும் தோழர் A.இளங்கோவன் மாநில பொருளாளர் அவர்களும் இணைய வழியாகவும் மாநிலச் செயலர் தோழர் R.ராஜசேகர், மாநில உதவிச்செயலர் தோழியர் பெர்லின் கனகராஜ், மாநில அமைப்புச் செயலாளர் தோழர். A.ஆரோக்கிய நாதன் ஆகியோர் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் எடுக்கப்பட்ட முடிவுகளும்.
1) ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினம்
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினத்தை மாவட்டச் சங்கங்கள் அம்பேத்கர் படத்திற்கு மாலையிட்டு, அல்லது அவருடைய சிலைக்கு மாலையிட்டும் கூட்டங்கள் நடத்தி அவருடைய வரலாற்றையும் எடுத்துரைத்து கொண்டாடுவது.
2) மே தினம்
மே தினத்தை கிளைகள் தோறும் கொடியேற்றி கூட்டங்கள் நடத்தி சிறப்பிப்பது.
அதில் டெல்லியில் மார்ச் 18 அன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மே 20 இதனை பிரச்சாரம் செய்யும் வகையிலும் இந்த வேலை நிறுத்தத்தில் சாத்தியமான வகைகளில் நம்முடைய தோழர்கள் கலந்து கொள்வதற்கும் இந்த மே தின கூட்டம் பயன்படுத்தப்பட வேண்டும்.
3) ஓய்வூதியர் முழக்கம்
மார்ச்-ஏப்ரல் இதழ் பணிகள் நடைபெற்று வருகிறது. கிளைகள், மாவட்டங்கள் ஐந்து ஆண்டு சந்தா தொகை பெருமளவு சேகரித்து மாநிலத்திற்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
4) இணைய வழியாக மாநில செயற்குழு கூட்டம் 19.04.2025 அன்று காலை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் செயலாளர்
9.4.25
0 Comments