Latest

10/recent/ticker-posts

AIBDPA TN சுற்றறிக்கை எண் 20/25..dt.17.4.25

  AIBDPA TN  சுற்றறிக்கை எண் 20/25..dt.17.4.25

Pr.CCA திரு அவதேஷ் குமார் அவர்களுடன் சந்திப்பு

தோழர்களே, 

.L     மாநில சங்கத்தின் சார்பில் Pr.CCA திரு. அவதேஷ் குமார் அவர்களை மாநில செயலர் தோழர். R.ராஜசேகர்   மாநில உதவிச்செயலர் தோழியர். பெர்லின் கனகராஜ்  மாநில அமைப்புச் செயலர் தோழர். A. ஆரோக்கிய நாதன் தோழர் R.சீனிவாச ராகவன் ஆகியோர் 15.4.25 அன்று சந்தித்து கீழ்க்கண்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். 

விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும் நிர்வாகத்தின் நிலைபாடும். 

1) CCA அலுவலக கிளைகள் கோவை, மதுரை,  திருச்சி போன்ற பகுதிகளில் துவங்குவது தொடர்பாக. 

நாம் இது தொடர்பாக நம்முடைய கடிதத்தின் நகலை அவரிடம் கொடுத்தோம். 

கோவையில் துவங்குவதற்கான திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

நாம் மதுரையிலும் உடனடியாக வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம்.  

2) குடும்ப ஓய்வூதியர் மாற்றம் 6 மாத   காலமாக தீர்க்கப்படாமல் இருப்பதையும், Jt.CCA வுடன் கடிதம் கொடுத்து விவாதித்த பிரச்சனைகளையும் Pr.CCA கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். 

Pr.CCA அவர்கள் விரைவில் அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

3) DLC கொடுப்பது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 

ஆனால் 

மாதாமாதம் DLC கொடுக்காதவர் எண்ணிக்கை தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருகிறது என்பதனை தெரிவித்தார்கள். 

நாம் மாதம்தோறும் DLC கொடுப்பவர்கள் பட்டியலோடு இணைத்து விடுபட்டு போனவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.  

Life certificate கொடுக்காதவர்களுக்கு தனியாக SMS அனுப்ப வேண்டும்  என்ற கருத்தையும் வலியுறுத்தினோம். 

DLC  கொடுக்க பிஎஸ்என்எல் CSCகளை பயன்படுத்தப் படுவதை உறுதிப்படுத்த வேண்டும். 

இது தொடர்பாக CCA அலுவலகம் CGM BSNL உடன் தொடர்பு கொண்டு விவாதிக்க வேண்டும் என்பதனையும் கூறினோம். 

4) DOT ID கார்டு தொடர்பாக காலதாமதம் உள்ளதை குறிப்பிட்டோம். 

அவரும் தனியாக CCA அலுவலகத்தில் இதற்காக மெஷின் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஓய்வூதியர்களுக்கு அனுப்புவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றார். 

நாம் BSNL GM அலுவலகம் மூலமாக இதனை விநியோகிக்கலாம். அதற்கு ஓய்வூதியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதனையும் தெரிவி்த்தோம். 

5) போன் மெக்கானிக் LPD பிரச்சனை  தொடர்பாகவும் விவாதித்தோம். 

அவரும் DOT இதனை ஒப்புக்கொள்ளவில்லை என்றார். எனினும் மீண்டும் உங்கள் தரப்பிலிருந்து  வலியுறுத்துங்கள் என்று நாம் அவரிடம் கேட்டிருக்கிறோம். 

பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார் 

தோழர்களே,  விவாதங்கள் சுமூகமான முறையில் இருந்தன. 

தோழமை வாழ்த்துக்களுடன்,
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
17.4.25

Post a Comment

0 Comments