AIBDPA TN சுற்றறிக்கை எண் 22/25....dt.28.4.25
JT.CCA திருமதி கௌதமி பாலா ஸ்ரீ அவருடன் சந்திப்பு
தோழர்களே !!
23-4-25 அன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் திருமதி. கௌதமி பாலாஸ்ரீ Jt.CCA அவர்களை சந்தித்து பேசினோம். மாநில சங்கத்தின் சார்பில் மாநில ஆலோசகர் தோழர். C.K.நரசிம்மன், மாநிலச் செயலாளர் தோழர். R.ராஜசேகர், தோழர் R.சீனிவாசராகவன் ஆகியோர் கலந்து கொண்டோம். நாம் நிலுவையில் இருக்கும் 104 பிரச்சினைகளை குறித்து அவரிடம் விவாதித்தோம். அவற்றை A.O.க்கள் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
நம்முடைய மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பிரச்சினைகள் தீரவில்லை என்றால் போராட்டம் நடவடிக்கை என்பதனை Jt.CCA அவர்களிடம் தெரிவித்து இருக்கின்றோம். அவர்களும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
2) குடும்ப ஓய்வூதியம் பிரச்சனைகளில் மூன்று மாதத்திற்கு மேல் காலதாமதம் உள்ளவை PPO Freeze ஆவது குறித்து குறிப்பிட்டிருக்கிறோம். அவர்கள் அதற்கு விதிவிலக்கு கேட்டு CGCA அவர்களுக்கு கடிதம் எழுதுவதாக கூறி இருக்கிறார்கள்.
Jt.CCA அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள்
3) புதிதாக 7 ஊழியர்கள் வந்திருப்பதாகவும் பென்ஷன் பகுதிக்கு 4, PDA பகுதிக்கு 3 பேர் போடப்பட்டு உள்ளார்கள். இன்னும் கூடுதலாக 8 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்ட உள்ளனர்.
4) 60 குடும்ப ஓய்வூதியம் மாற்றம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 150 நிலுவையில் உள்ளது.
5) இமெயில் களுக்கு உடனடியாக பதிலளிப்பதற்கும், DLC புகார்களுக்கு WhatsApp நம்பர் அமுலுக்கு வரும்.
6) HELPDESK ( டெல்லி) பகுதியில் காலதாமதமாவது குறித்து, சங்கங்களும் DOT மட்டத்தில் பேசவேண்டும் என்று Jt.CCA குறிப்பிட்டிருக்கிறார்.
7) கம்முடேஷன், IDA arrears போன்ற பிரச்சனைகள் manual ஆக போடுவதால் காலதாமதம் ஆகிறது.
இவை sampamn 2.0 வருகின்ற பொழுது இவை சரி செய்யப்படும்.
8) விரைவில் Dy.CCA பதவி நிரப்பப்படும்.
9) CCA அலுவலகம் கிளைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
10) Notional இன்கிரிமெண்ட் தொடர்பாக வழக்கு தொடுத்தவர்களுக்கு முதல் கட்டமாக அமுல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
CGM தமிழ்நாடு, CGM CNTX south இவர்களோடு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில் அமுல்படுத்தப்படும்.
மற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வழக்குத் தொடுத்தவர்களுக்கு பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்தும் மற்றவர்களுக்கு 1 5 23ல் இருந்தும் நிலுவைத் தொகை வழங்கப்படும்.
தோழர்களே,
நாம் நம்முடைய மாநில செயற்குழு கூட்டத்தில் தோழர்களின் உணர்வுகளை சரியான விதத்தில் நிர்வாகத்திற்கு பிரதிபலித்து இருக்கிறோம்.
அதைப் புரிந்து கொண்டு நிர்வாகம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
இல்லையெனில் மாநில சங்கம் மாநில செயற்குழு கூட்ட முடிவை அமுல்படுத்தும்.
R.ராஜசேகர்
மாநிலச் செயலர்
28.4.25
0 Comments