Latest

10/recent/ticker-posts

AIBDPA TN பென்சன் மறு மதிப்பீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். 3.4.25

  AIBDPA TN  பென்சன் மறு மதிப்பீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். 3.4.25


தோழர்களே, 

                         மத்திய அரசாங்கம் 2025 நிதி மசோதாவோடு இணைந்து மத்திய அரசு பென்சன்தாரர்களுக்கான புது பென்ஷன் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி ஒப்புதல் பெற்றுள்ளது. மக்களவையிலும் தாக்கல் செய்ய உள்ளார்கள். 

இது அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் 1982இல் போராடி பெறப்பட்ட நகாரா தீர்ப்புக்கு எதிராகவும்  ஓய்வூதியர்களை வஞ்சித்து உள்ளது. 

எட்டாவது ஊதியக் குழுவிற்கு முன்/ பின் என்ற அடிப்படையில் ஓய்வூதியர்களை இரு கூறுகளாக பிரிக்க உள்ளது. 

ஊதிய மாற்றம் வருகின்ற பொழுது பென்ஷன் மாற்றத்தையே கேள்விக்குறியாக்கும் அரசாங்கத்தின் நயவஞ்சக நோக்கம் இது. 

இதை அனுமதித்தால் மெல்லமெல்ல பென்ஷன் என்பதனையே கேள்விக்குறியாக  ஆக்குவார்கள் என்கின்ற நமது எச்சரிக்கை உண்மையாகும். 

ஆகவே இதனை எதிர்த்து ஒரு வலுவான இயக்கத்தை நடத்த வேண்டியது அனைவரின் கடமை. இதில் முதல் கட்டமாக NCCPA அமைப்பு 3.4.25 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு அறைகூவல் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில இணைப்புக் குழு (NCCPA) அறைகூவல் கொடுத்திருக்கிறது. 

மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர்களின் கூட்டமைப்பும் இந்த போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

BSNL அரங்கத்தில் AIBSNLPWA அமைப்பும், நமது கூட்டு நடவடிக்கை குழுவில் அங்கம் வகிக்கும் SNPWA மற்றும்  BDPA (I) அமைப்புகளும் இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

ஆகவே, நமது மாவட்ட செயலாளர்கள் நம்முடைய மாவட்டங்களிலுள்ள AIBSNLPWA, SNPWA  மற்றும் BDPA (I)  அமைப்புகளோடு தொடர்பு கொண்டு இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட திட்டமிட வேண்டும். 

போராட்டத்தை அனைவரையும் ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இயக்கமாக நடத்திடுவோம். 


 தோழமை வாழ்த்துக்களுடன் R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
1.4.25

Post a Comment

0 Comments