Latest

10/recent/ticker-posts

நெல்லை AIBDPA மாவட்டச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா !!

 சிறப்பாக  நடைபெற்ற ஓய்வூதியர் முழக்கம் பத்திரிக்கை வெளியீட்டு விழா, சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கார் 135 வது பிறந்தநாள் விழா, தோழர் சுந்தர்ராஜன் நினைவு அஞ்சலி மற்றும் 3வது  விரிவடைந்த மாவட்ட செயற்குழு

AIBDPA நெல்லை மாவட்டம்
-----------------------------------
திருநெல்வேலி மாவட்டத்தின்

3வது  விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் 21-04-2025 திங்கட்கிழமையன்று தோழர் S.சுந்தர்ராஜன் நினைவரங்கம் மின் ஊழியர்கள் ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் (CITU) அலுவலகம் தியாகராஜநகர், பாளையங்கோட்டையில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர். M.கனகமணி தலைமை தாங்கினார். 




             காலை 10 மணிக்கு முதல் நிகழ்வாக மறைந்த தோழர். எஸ் சுந்தர்ராஜன் அவர்களின் திருஉருவ படத்திற்கும் சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

           மாவட்டத் தலைவர் தோழர். M.கனகமணி அவர்களின் தலைமை உரைக்குப் பின் மாவட்டப் பொருளாளர் தோழர். S.சங்கரநாராயணன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்ட செயலர் தோழர். S.முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். 

           அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S.மோகன்தாஸ் "ஓய்வூதியர் முழக்கம்" பத்திரிகையை பலத்த கரவொலிக்கு மத்தியில் வெளியிட்டார். முதல் பிரதியை தமிழ் மாநில உதவித் தலைவர்கள் தோழர். S. நடராஜா, தோழர். P.ராமர், தமிழ் மாநில தணிக்கையாளர் தோழர். R.ராமநாதன், BSNLEU மாவட்ட செயலாளர் தோழர். N.சூசைமரிய அந்தோணி வியாகப்பன், முன்னணித் தோழர். K.செல்வராஜ், கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.








               நிகழ்ச்சியை துவக்கி வைத்து அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S. மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் பத்திரிக்கையின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட தலைவர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர்.

             மதிய உணவு இடைவேளிக்குப் பின்னர் கீழ்க்கண்ட ஆய்படுபொருளுடன் விரிவடைந்த செயற்குழு தொடங்கியது.

1. ஓய்வூதியர் முழக்கம் -சந்தா

2. ஆண்டு நன்கொடை

3. செயல்பாட்டு அறிக்கை, 

4.வரவு செலவு கணக்கு, 

5.அமைப்பு நிலை விவாதம்,

6.தலமட்ட பிரச்சனைகள்,

7.தலைவர் அனுமதியுடன் பிற.

          அமைப்பு நிலை விவாதத்தை தோழர் R.ராமநாதன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் வள்ளியூர் கிளைச் செயலாளர்  தோழர். A.பிச்சுமணி, தென்காசி கிளைச் செயலர் தோழர். K.கணேசன், சங்கரன்கோவில் கிளைச் செயலாளர் தோழர். D.கிறிஸ்டோபர் ராஜதுரை ஆகியோர் அமைப்பு நிலை விவாதத்தில் பங்கு கொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

             தோழர்களின் கேள்விகளுக்கு மாவட்ட செயலாளர் தோழர். S.முத்துசாமி விளக்கமளித்ததுடன் கடந்த மாவட்ட செயற்குழுவிற்கும் இந்த மாவட்ட செயற்குழுவிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சங்க செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

       வரவு செலவு கணக்கு பற்றி மாவட்ட பொருளாளர் தோழர். S.சங்கரநாராயணன் கூறினார். இவை இரண்டும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                  ஓய்வூதியர் முழக்கம் சந்தா ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 500/= கொடுப்பது என்றும் மற்றும் நமது சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 200/= கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமானதாக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

1. ஓய்வூதியர் முழக்கம் பத்திரிக்கை சந்தா ரூபாய் 500 /= ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வசூலிப்பது.

2. ஆண்டுக்கு ரூபாய் 200/= நன்கொடை  வசூலிப்பது.

3. பெண்கள் கமிட்டி அமைப்பது. 4.உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்துவது.

5.  மாவட்டங்களில் பயிற்சி பட்டறை நடத்துவது.

6. மாவட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும்  உறுப்பினர் டைரி பராமரிப்பது .

7. CCA அலுவலகத்தில் பிரச்சனைகள் தீர்ப்பதில் உள்ள காலதாமதத்தை தீர்க்க கவன ஈர்ப்பு நாள் இயக்கம் நடத்துவது.

8. பென்சன் வழங்குவதில் உள்ள NPC, UPC நிராகரிப்பது, OPS அமல் படுத்த வேண்டும்.

9. EPF பென்ஷன் தாரர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்க வண்டும்.

10. மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் பில் விரைவில் தீர்வு.

 11. சி சி ஏ அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் நியமனம்.

12. Commutation காலம் 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.

13. தொழிலாளர்கள் சட்டங்களை வெட்டி சுருக்குவதை கண்டித்தல்.

14. மே 20 அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் நாமும் கலந்து கொள்வது 

 15. திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது  பாராட்டுக்குறியது. 

ஆகிய தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

             தோழியர் J.மரிய சுந்தரம் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவுக்கான செலவுக்கு ரூபாய் 4000/=ம் வழங்கி இருக்கிறார். தோழியர் J.மரிய சுந்தரம் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிறைவாக மாவட்ட உதவி செயலர் தோழர். R. M.கிறிஸ்டோபர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தோழமை வாழ்த்துக்களுடன்,
 ச. முத்துசாமி
மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி மாவட்டம்.

22-04-2025.

Post a Comment

0 Comments