வெற்றி !.... வெற்றி..!! AIBDPA போராட்டம் ...மாபெரும் வெற்றி !!!
23.04.25 அன்று ஈரோடு பொது மேலாளர் அலுவலகத்தில் திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் P.சின்னசாமி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் V.மணியன் ஆர்ப்பாட்டத்தை கோரிக்கை முழக்கங்களிட்டு துவக்கி வைத்தார். மாவட்ட பொறுப்பு செயலர் தோழர். M. நடராஜன் அவர்கள் போராட்டத்திற்கான காரணங்களை விளக்கி பேசினார்.
கோரிக்கைகளை விளக்கி மாநில துணை தலைவர் தோழர் N. குப்புசாமி, மாநில துணை செயலர் தோழர். L. பரமேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் தோழர். C.பரமசிவம், துணை செயலர்கள், தோழர்கள் மாணிக்கம் மற்றும் C. மணி ஆகியோர் பேசினார்கள். சகோதர சங்கம் சார்பாக தோழர் காசிராஜன் வாழ்த்தி பேசினார்கள்.
பின்னர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாக தரப்பில் GM, DGM, AGM (admin) மற்றும் DGM (finance) ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பெரும்பாலன கோரிக்கைகளில் தீர்வு காணப் பட்டது.
BSNL அலுவலகத்தில் லைஃப் சர்டிபிகேட் கொடுப்பதற்கும், மீட்டிங் நடத்த அனுமதிப்பதற்கும் மாநில நிர்வாக உத்தரவு தேவை என நிர்வாக தரப்பில் தெரிவிக்க பட்டது.
MRS கார்டு புதுப்பித்தல் சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது. உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் விவாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை முடிவுகளை தோழர் N. குப்பசாமி மற்றும் P. சின்னசாமி அவர்கள் உறுப்பினர்களிடம் விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். எல்லா கிளைகளில் இருந்தும் அதிக அளவில் கலந்து கொண்டனர். தாராபுரம், பெருந்துரை, கோபி, சத்தி, கவுந்தப்பாடி, அந்தியூர் உட்பட தொலைதூர கிளைகளில் இருந்து கலந்து கொண்டனர். பேரெழுச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கலந்துகொண்ட அனைத்து கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி. மாநில செயலர் மற்றும் மாநில சங்கத்திற்கும் மாவட்ட சங்கம் சார்பாக நன்றி.
இறுதியில் தோழர். சொளந்தரராஜன் கோரிக்கை முழக்கமிட மாவட்ட பொறுப்பு செயலர் M நடராஜன் அவர்கள் நன்றி கூறி போராட்டத்தை நிறைவு செய்தார்.
சின்னசாமி,
நடராஜன் மாவட்ட பொறுப்பு செயலர்,
வெங்கடேஷ்
மாவட்ட பொருளர்.
0 Comments