விருதுநகர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம்
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நமது விருதுநகர் மாவட்ட சங்கத்தின் நான்காவது விரிவடைந்த செயற்குழு கூட்டம் மற்றும் ஓய்வூதியர் முழக்கம் இதழ் வெளியீட்டு விழா என இருபெருவிழாக்கள் 12.04.2025ல் விருதுநகர் M R V நினைவு அரங்கத்தில் மாவட்டத் தலைவர் தோழர். ஜி.செல்வராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தோழர் பெ.தர்மராஜ் அவர்களின் அஞ்சலி உரைக்கு பின்னர் தோழர் க.புளுகாண்டி மாவட்ட செயலாளர் வரவேற்பு நிகழ்த்தினார்.
பின்னர் மாநில துணை தலைவர் தோழர் ஜி.செல்வராஜ் அவர்கள் ஓய்வூதியர் முழக்கம் இதழ் வெளியிட்டார். முதல் பிரதிநிதியை கிளை செயலர் தோழர். ஏ.இன்பராஜ் சிவகாசி, பெண்கள் கிளை தலைவர் தோழர். மேரி, திருவில்லிபுத்தூர் தோழர்கள் மாரியப்பா, பெருமாள்சாமி, தோழியர் பாண்டியம்மாள் ஆகியோர் பெற்று கொண்டனர். மாநில, மாவட்ட சங்கங்களுக்கு நன்கொடை வழங்கிய தோழியர் லதா சிதம்பரம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டார். மாவட்ட செயலாளர் செயல்பாட்டறிக்கை சமர்பித்தார்.
தோழர் எஸ்.நடராஜா மாநில துணை தலைவர் சிறப்புரை நிகழ்த்தினார்.
தோழர்கள் பி.சிவஞானம், எம். முத்துசாமி ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தோழர் எம்.பெருமாள்சாமி நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
க.புளுகாண்டி
மாவட்ட செயலாளர்
AIBDPA
விருதுநகர்.
0 Comments