சேலம் மாவட்டம் ராசிபுரம் கிளைக் கூட்டம்
24.4.2025 இன்று ராசிபுரத்தில் CoC சார்பில் கிளைக் கூட்டம் நடைபெற்றது. AIBDPA தோழர்கள் பெருவாரியாக பங்கேற்றனர். தோழர். தங்கவேல் BSNLEU அவர்கள் தலைமை தாங்கினார். தோழர். P.A. ஆறுமுகம் ADS அவர்களின் அஞ்சலி உரைக்குப் பின், தோழர். P.M.ராஜேந்திரன் BS அனைவரையும் வரவேற்றார்.
AIBDPA CoS தோழர். S.அழகிரிசாமி அவர்கள் மத்திய அரசின் தனியார் ஆதரவு கொள்கைகளை விளக்கி நமது கடமைகளை சொல்லி துவக்க உரையாற்றினார். உறுப்பினர்களிடம் பிரச்சினைகள் கேட்கப் பட்டு, அவைகளை தீர்த்து வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தோழர். P.தங்கராஜு DT தனது உரையில் ஓய்வூதியர் மெடிகல் பிரச்சினைகளை தீர்க்க AIBDPA மத்திய சங்கத்தின் போராட்டங்களை எடுத்துக் கூறினார்.
மாவட்டச் செயலர் தோழர். S.தமிழ்மணி மாநில செயற்குழு முடிவுகளையும், ஓய்வூதிய மாற்றத்தில் மத்திய அரசின் மோசமான அணுகுமுறை குறித்தும், ஓய்வூதியர் இயக்கங்களை ஒன்றிணைத்து நாம் நடத்த வேண்டிய போராட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். ஓய்வூதியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் தோழியர் மணிமேகலை ராஜசேகர் DoS, தோழர் சண்முகசுந்தரம் Retd SDE, BSNLEU DoS தோழர் V.ராஜ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ராசிபுரம் கிளை ஓய்வூதியர் முழக்கம் சந்தா இதுவரை 30 பிடித்துள்ளது என்பது ஒரு நல்ல செய்தியாகும். மே தினம், மே 20 பொது வேலைநிறுத்தம் ஆகியவற்றில் தோழர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இறுதியாக தோழர் விஜயகுமார் TNTCWU அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்
S. தமிழ்மணி
மாவட்டச் செயலாளர்
0 Comments