AIBDPA TN சுற்றறிக்கை எண் 19/25 .....dt.10.4.25
CGM BSNL திரு S. பார்த்திபன் அவர்களுடன் சந்திப்பு
தோழர்களே,
தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் CGM BSNL திரு S. பார்த்திபன் அவர்களை 9.4.25 அன்று சந்தித்தோம். மாநில சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர், மாநிலத் துணைச் செயலர் தோழியர் பெர்லின் கனகராஜ், மாநில அமைப்புச் செயலர் தோழர். A.ஆரோக்கியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். நிர்வாகத்தின் சார்பில் GM(HR) திரு.துளசிராமன் அவர்கள் உடன் இருந்தார்கள்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும் நிர்வாகத்தின் விளக்கமும்.
1) திருச்சி மாவட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை மாற்றுவதற்கான ஆப்ஷன் ஏற்கப்படவில்லை.
இது நீண்டகாலமாக விவாதத்தில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி தேவையான உத்தரவுகளையும் நாம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
CGM அவர்கள் இது தொடர்பாக விவாதித்து ஒரு சரியான முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
2 ) மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் மெடிக்கல் பில் பட்டுவாடா
கடந்த கால் ஆண்டுக்கு பட்டுவாடா செய்யப்படும் பொழுது, பல மாவட்டங்களில் சரியாக இருந்தாலும் மதுரையில் 562 ஓய்வூதியர்களுக்கு அலவன்ஸ் போடப்படவில்லை என்பதனை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
அவர்களும் அடுத்து நடக்க இருக்கும் நிர்வாக மேலாண்மை கூட்டத்தில் இது சம்பந்தமாக முடிவெடுத்து ஒவ்வொரு காலாண்டு முடிகின்ற போதும் அந்த மாதம் முதல் வாரத்திலேயே ERPல் அப்டேட் பண்ணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.
3) மெடிக்கல் அதாலத்.
2023, 2024ம் ஆண்டுகளில் நடைபெற்ற மெடிக்கல் அதாலத்துகளின் காரணமாக மெடிக்கல் பிரச்சினைகள் பல மாவட்டங்களில் தீர்க்கப்பட்டதை கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
அவர்கள் இப்பொழுது பிரச்சனைகள் இல்லை. ஆகவே மெடிக்கல் ஆதாரம் தேவையில்லை என்ற கருத்தை சொன்னார்கள்.
நாம் அதாலத் நடந்ததால் தான் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே தொடர்ந்து அதாலத் நடத்த வேண்டும், அப்போது தான் நிராகரிக்கப்பட்ட பில்களை பரிசீலனை செய்வதற்கு உதவி செய்யும் என்று வலியுறுத்தி இருக்கின்றோம். அதையும் அவர்கள் நிர்வாக மேலாண்மை கூட்டத்தில் விவாதிப்பார்கள்.
4) கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஐந்து கணக்கு அதிகாரிகளுக்கு
1.4.2004 முதல் 31.12.2019 வரை வரவேண்டிய நிலுவைத் தொகை குறித்து விவாதித்து இருக்கின்றோம். தேவையான உத்தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. அது குறித்து கணக்கு அதிகாரிகளோடு விவாதித்து சரியான முடிவு எடுப்பதாக CGM உறுதியளித்து இருக்கின்றார்.
இதுவும் நீண்டகால பிரச்சனை என்பதை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.
5) ஈரோடு மாவட்டத்தில் மெடிக்கல் கார்டு RE-VALIDATION பிரச்சினையில் அனைவரும் DLC கொடுத்து விட்டு JEEVAN PRAMAN நகல் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவதை நாம் சுட்டிக் காட்டி,
உத்தரவு அப்படி இல்லை, தற்போது உள்ள நடைமுறை நேரில் வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
அது சம்பந்தமாக ஈரோடு மாவட்ட GM உடன் விவாதிப்பதாக கூறி இருக்கிறார்கள்.
6) காலதாமதமாக தரப்பட்டதால் நிராகரிக்கப்பட்ட (Late) கிரிஜா கேசவன் ( ஈரோடு) மெடிக்கல் பில் பிரச்சனையை விவாதித்தோம்.
அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துவிட்டு அந்த கடிதத்தின் நகலை மாநில நிர்வாகத்திடம் கொடுக்க ஆலோசனை தரப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட சங்கம் இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட தோழரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கச் சொல்ல வேண்டும்.
7) Non empanel ஹாஸ்பிடல் emergency certificate இல்லாமல் நிராகரிக்கப்படும் பில்களையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம்.
அதற்கும் சம்பந்தப்பட்ட தோழர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்க வேண்டும். நகல் மாநிலச் சங்கத்திற்கு வரவேண்டும் .
8) 1.10.2000 பிறகு பணியில் அமர்ந்து அண்மைக் காலங்களில் ஓய்வுபெற்ற EPS (EPF Pension scheme)/ Superannuation Pension Scheme பயனாளிகள் இவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட மட்டத்திலும், அகில இந்திய மட்டத்திலும் இதற்கான நிர்வாக ஏற்பாடு இல்லை என்பதனை அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றோம்.
CGM அவர்களும் நமது கோரிக்கையை கடிதமாக கொடுத்தால் நிர்வாகக் கூட்டத்தில் விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
9) நாகர்கோவில் மாவட்டத்தில் தோழர். A.கிருபாகரன் ஜான் ராஜ் மெடிக்கல் பில் பிரச்சினையை விவாதித்தோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருக்கின்றார்கள்.
தோழர்களே
CGM உடன் நடைபெற்ற பேட்டி நீண்ட நாளைக்கு பிறகு நமக்கு கிடைத்தது. மாலை 06.30 முதல் 07.15 வரை நடைபெற்றது. நடைபெற்ற கூட்டம் சிறப்பான முறையில் இருந்தது.
இந்த கூட்டத்தில் பல பிரச்சினைகளை விவாதித்துள்ளோம். நிர்வாகமும் அவற்றை தீர்த்து வைப்பதாக CGM மற்றும் GM(HR) ஒப்புதல் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி
மாவட்ட சங்கங்களும் மாவட்ட நிர்வாகத்தோடு தேவையான நேரங்களில் பேட்டிகளை காண வேண்டும். அவர்களுடன் பிரச்சினைகளில் விவாதிக்க வேண்டும் என மாநிலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
மாநிலச் செயலாளர்
10.4.25
0 Comments