Latest

10/recent/ticker-posts

திரு.ஆனந்த் கர்ரே DoT-Member (Services) க்கு AIBDPA பொதுச்செயலர் தோழர்.K.G.ஜெயராஜ் அனுப்பியுள்ள கடிதம்.

BSNL/MTNL ல் இணைக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு 01-01-2017 அன்று முதல் பென்சன் மாற்றம் வேண்டும்...என்பதை வலியுறுத்தி.

திரு.ஆனந்த் கர்ரே DoT-Member (Services) க்கு 

AIBDPA பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் அனுப்பியுள்ள கடிதம்.



ஐயா,

          குறிப்பிட்டுள்ள இப்பிரச்சினையில் உள்ள முக்கிய விஷயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

தொலைத்தொடர்புத் துறையைச் (DoT) சார்ந்த மத்திய அரசு ஊழியர்கள் புதிய நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (BSNL) க்கு  01-10-2000 முதல் பணியமர்த்தப்பட்டனர்.

             BSNL உருவாக்கப்பட்டபோது, ​​பிரதமராக இருந்த திரு. A. B. வாஜ்பாய்  தலைமையிலான அப்போதைய மத்திய அரசு, தொலைத்தொடர்புத் துறை மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துறையின் முன்னாள் ஊழியர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் அரசு ஓய்வூதியத்தை உறுதி செய்து உத்தரவாதம் கொடுத்தது.

                   அதற்காக CCS (Penslon) விதிகள், 1972 இல் விதி 37A ஆக தேவையான திருத்தமும் செய்யப்பட்டது. அதன்படி, BSNL மற்றும் MTNL இல் இணைக்கப்பட்டு, பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஒருங்கிணைந்த நிதியிலிருந்துதான்  ஓய்வூதியம் வழங்கி வருகிறது.

                  அவர்களுக்கு lDA சம்பள அளவுகள் மற்றும் காலாண்டு அகவிலைப்படி வழங்கப்பட்டது.  CPSE அதிகாரிகளுக்கு 2வது PRC பரிந்துரைத்த அதிகபட்ச 30% (figment) பொருத்துதலுடன் 01-01-2007 முதல்  பென்சன் மாற்றம் செய்யப்பட்டது. அடுத்து 3வது PRC 01-01-2017 முதல் அதிகபட்சமாக 15%  பொருத்துதலை (fitment)  பரிந்துரைத்துள்ளது. ஆனால் இது BSNL/MTNLல் லாபம் ஈட்டவில்லையென்று காரணம் காட்டி செயல்படுத்தப்படவில்லை.

       BSNL / MTNL ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்குப் பிறகுதான் - ஓய்வூதியமாற்றம் சாத்தியமாகும் என்ற நிலைபாட்டை அரசாங்கம் ஆரம்பத்தில் எடுத்திருந்தது. BSNL / MTNLல் இணைக்கப்பட்ட ஓய்வூதியர்களின் ஓய்வூதிய சலுகைகளின் முழுப் பொறுப்பையும் மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கம் வசதியாக மறந்துவிடுகிறது.   மேலும், BSNL/ MTNL இல் இணைக்கப்பட்டு ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய பங்களிப்பு (pension contribution) அவர்களின் அதிகபட்ச ஊதிய அளவுகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மையை உணர்ந்த தொலை தொடர்புத் துறை (DoT) ஊதிய மாற்றத்தோடு  இணைக்காமல், ஓய்வூதிய மாற்றத்தை வழங்குவதற்கான  முன்மொழியும் உள்குறிப்பை (Internal note) தயாரித்துள்ளது.

          மேலும் இது 17-10-2022 அன்று அப்போதைய DoT Member {Services} ஆல் நடத்தப்பட்ட அனைத்து ஓய்வூதியர் சங்கங்களுடனும் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்த ஒரே கருத்து வேறுபாடு DoT ஆல் முன்மொழியப்பட்ட பூஜ்ஜிய சதவீத (0% figment) பொருத்தம் என்பது மட்டுமே. 

             தீவிர விவாதத்திற்குப் பிறகு, பொருத்தம் காரணியை (fitment factor) ஐ உயர்த்த  சாதகமாக மறுபரிசீலனை செய்ய நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி கோப்பு (file) தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியது. சில ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த நீதிமன்ற வழக்குகள் மற்றும் PBCAT, டெல்லி ஓய்வூதிய மாற்றம் குறித்த உத்தரவு காரணமாக, தீர்வு எட்டுவது  தவிர்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், PBCAT உத்தரவுக்குப் பிறகும் பேசி ஒரு நியாயமான தீர்வை எட்டலாம் என்று உறுதியளித்தார். ஆனால் அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை.  அதே நேரத்தில் 01-01-2026 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான ஊதியம்/ஓய்வூதிய மாற்றத்திற்காக 8வது சம்பளக்கமிசனை (8th CPC) அமைக்க  அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

               எங்களுக்கு 01-01-2017 முதல் அளிக்கப்படவேண்டிய ஓய்வூதிய மாற்றத்தில் ஏற்பட்ட அநியாய கால தாமதம், கடந்த 18 ஆண்டுகளாக ஓய்வூதிய மாற்றம் இல்லாததால், ஓய்வூதியதாரர்களிடையே துயரம், ஏமாற்றம் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான BSNL MTNL ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய மாற்றதிற்கான சட்டப்பூர்வமான உரிமையைப் பெறாமல் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டனர்.

              எனவே, இந்த மிகவும் பற்றி எரியும் இப்பிரச்சினையில் நீதிமன்றத்திற்கு வெளியே (out of court settlement) நியாயமான தீர்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் உங்களை மனதார கேட்டுக்கொள்கிறோம்

 வாழ்த்துக்களுடன்,
உண்மையுள்ள,
K.G.ஜெயராஜ்
பொதுச்செயலர்
Copy to: Shri. Manish Sinha, Member (Finance), DoT.

தோழமையுடன்,
S நடராஜா,
கன்வீனர் 
NCCPA 
திருநெல்வேலி மாவட்டம்.

26-04-2025

Post a Comment

0 Comments