• கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !!

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

  • NCCPA AIC – Honoring the volunteers meeting at Chennai on 23.12.23.

    NCCPA AIC  – Honoring the volunteers meeting at Chennai on 23.12.23.

  • நவம்பர் 30ல் லைவ் சர்டிபிகேட் முடிந்தவர்கள் டிசம்பர் 20 வரை வழங்க ஏற்பாடு

    நவம்பர் 30ல் லைவ் சர்டிபிகேட் முடிந்தவர்கள் டிசம்பர் 20 வரை வழங்க ஏற்பாடு

    தோழர்களே,

              நவம்பர் 30 அன்று ஆயுள் சான்றிதழ் முடிந்தவர்கள் டிசம்பர் 20 வரை தரலாம். நமது மாநிலச் செயலாளர் மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர்களும் மழையின் காரணமாக வாழ்வு சான்றிதழ் கொடுப்பதில் தலமட்டத்தில் பிரச்சனை ஏதும் இல்லை என்பதனை தெளிவாக தெரிவித்து விட்டார்கள்.

              இன்று மதியம் 3 மணி வரை வாழ்வு சான்றிதழ் கொடுக்காதவர்கள் எண்ணிக்கை மாநில மட்டத்தில் 2022. இதில் சென்னை, சென்னை தொலைபேசி பெரியளவு அடங்கும். மீதம் உள்ளவர்கள் தான் 18 டெலிகாம் மாவட்டங்களில் இருப்பார்கள்.

                 ஆகவே மாவட்டங்களில் 50 முதல் 60 வயது தான் இந்த எண்ணிக்கை இருக்கலாம் என்பது எங்களது கணிப்பு. அதில் நமது உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதையும் பார்க்க வேண்டும்.

            ஆகவே மாவட்ட செயலாளர்கள் மாநிலச் சங்க நிர்வாகிகள் இதை சற்று ஆராய்ந்து நம்முடைய உறுப்பினர்களை உடனடியாக வாழ்வு சான்றிதழ் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டும். நிர்வாகமும் மாதத்தின் கடைசி தேதி வரை RPT கடைசி தேதி வரை காத்திருப்பதற்கு உறுதி அளித்துள்ளார்கள்

    தோழமை வாழ்த்துக்களுடன்
    ஆர் ராஜசேகர்.
    மாநில செயலாளர்
    23.12.23

  • வெண்மணி தியாகிகள் தினம் – மாநில சங்கம் அஞ்சலி செலுத்த ஏற்பாடு –  வரும் தோழர்களின் கவனத்திற்கு !!

    வெண்மணி தியாகிகள் தினம்மாநில சங்கம் அஞ்சலி செலுத்த ஏற்பாடு –  வரும் தோழர்களின் கவனத்திற்கு !!

    தோழர்களை,
                  டிசம்பர் 25 வெண்மணி தியாகிகள் தினம் – இந்த ஆண்டு AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துவது என்று  மாநிலச் சங்க செயற்குழுவின் முடிவு.

              மாவட்ட சங்கங்கள் தங்களுடைய பங்கேற்பை பதிவு செய்ய சொல்லி கேட்டிருந்தோம். இதுவரை கோயம்புத்தூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்கள் வருவதாக தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

    மற்ற மாவட்டங்களும் தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டுகிறோம்.

    வெண்மணி அஞ்சலி நிகழ்வினை ஒரு சிறப்பான நிகழ்வாக அனுசரிப்போம்.

    வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வரும் தோழர்களின் கவனத்திற்கு !!

               வெண்மணி நினைவிடம் வரும் தோழர்கள் தங்குவதற்கு திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விபரம் :

    AJ திருமண மண்டபம் , நீலப் பாடி … திருவாரூர் டூ கீவளூர் வழி – திருவாரூரில் இருந்து 8 கி.மீட்டர் தூரம் நீலப் பாடி ( மெயின் ரோட்டில்  மண்டபம்  உள்ளது .)

    24 ம் தேதி இரவு 9 மணி முதல் தங்கலாம் .
    25ம் தேதி காலை – பகல் உணவு ஏற்பாடு உண்டு .

        தொடர்பு :
    பி . செல்வராஜ் –9442276080
    ப . சண்முகம் –9486138821 .

    தோழமையுடன்
    R.ராஜ சேகர்
    மாநில செயலர்
    22.12.23.

  • AIBDPA சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் கிளையின் மாதாந்திரக்கூட்டம்

    AIBDPA சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் கிளையின் மாதாந்திரக்கூட்டம்

                     22.12.2023 இன்று சேந்தமங்கலம் AIBDPA கிளை சார்பில் மாதாந்திரக்கூட்டம் நடைபெற்றது. தோழர். P. முத்து BP கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தோழர். R. செல்வராஜூ BT அஞ்சலியுரைக்குப் பின் தோழர். A. அங்குராஜு BS அனைவரையும் வரவேற்றார்.

                      மாவட்டச் செயலர் தோழர் S. தமிழ்மணி துவக்க உரை ஆற்றினார். பென்சன் மாற்றத்தில் AIBDPA வின் போராட்ட அணுகுமுறையை விளக்கமாகக்கூறினார்.

                        தோழர்கள் K.M.செல்வராஜூ ADT, S.ராமசாமி BS NAM AIBDPA ஆகியோர் கருத்துரை வழங்கினர். TNTCWU மாநாட்டு நிதி ₹2000/ வழங்கப்பட்டது

                    தோழர் S.அழகிரிசாமி ADS AIBDPA நிறைவுரை ஆற்றினார். நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசின் கொள்கை அணுகுமுறையை சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்ட பின் தோழர். காளி அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

    தோழமையுள்ள,
    S. தமிழ்மணி DS AIBDPA

  • AIBDPA வேலூர் கிளை மாநாடு

    AIBDPA வேலூர் கிளை மாநாடு

                  21-12-2023 காலை 10 மணி அளவில் சி ஐ டி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தோழர். தேவன் தலைமையில் துவங்கியது. கிளைச் செயலாளர் தோழர். ஜி. ரவி அவர்கள் சென்ற ஆண்டின் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

          புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு தோழர். தேவன் தலைவராகவும், தோழர். குப்பலிங்கம் செயலாளராகவும், தோழர் கண்ணபிரான் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

          வாழ்த்துறையாக வேலூர் மாவட்ட தலைவர் தோழர். ஞானசேகரன், தோழர், காசி தாலுகா செயலாளர், தோழர். ரங்கன் மின்வாரிய ஊழியர் சங்கம், தோழர். கேசவன் சிஐடியு, தோழர். செல்வம் எல்ஐசி, மத்திய மாநில ஓய்வூதிய சங்கத் தலைவர் தோழர். காமராஜ், விவசாய சங்க தலைவர் வாழ்த்துரை வழங்கினார்கள். நன்றியுரை தோழர் பழனிசாமி நன்றி கூறிவிழா சிறப்புற நிறைவு பெற்றது

  • 20.12.23ல் கோவை மாவட்டம் கணபதி கிளை மாநாடு

    20.12.23 கோவை மாவட்டம் கணபதி கிளை மாநாடு

    தோழர்களே !!
                 20.12.23 அன்று தோழர் K. சந்திரசேகரன் கிளைத் தலைவர் அவர்கள் தலைமையில் கோவை மாவட்டம் கணபதி கிளையின் மாநாடு சிறப்பாக துவங்கியது. மூத்த தோழர். ராஜேந்திரன் சங்க கொடி ஏற்றி வைத்தார். தோழர். சந்திரன் கிளைத் தலைவரின் தலைமை உரைக்குப் பின் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர். R. தங்கராஜ் வந்திருந்த அனைவரையும் வரவேற்புரை முடித்து தனது கருத்தை பதிவு செய்தார்.

          தோழர். A. குடியரசு மாவட்டச் செயலாளர் கிளை மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அதைத் தொடர்ந்து BSNLEU மாவட்ட உதவி செயலாளர் தோழர். சாஹின் அஹமது வாழ்த்துரை வழங்கினார். தோழர். V. வெங்கட்ராமன் AOS சிறப்புரை நிகழ்த்தினார். தோழர். சம்பத் TNTCWU மாவட்ட உதவி செயலாளர் வாழ்த்தி பேசினார்.

                அடுத்து ஆண்டு அறிக்கை, நிதி நிலைமை வாசிக்கப்பட்டது. அவை அதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து மாநில அமைப்பு செயலாளர் தோழர். T.K. பிரசன்னா, மாநில உதவி பொருளாளர் தோழர் B. நிசார் அகமது, தோழர் மகுடீஸ்வரி மாநில சிறப்பு அழைப்பாளர், மாவட்ட பொருளாளர் N.P. ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக தோழர் ராஜ் கிளை பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
    20.12.23 அன்று நடைபெற்ற கணபதி கிளை மாநாட்டில் தோழர் K. சந்திரசேகரன் தலைவராகவும், தோழர் தங்கராஜ் உதவி தலைவராகவும் சந்திரன் கிளைச் செயலாளராகவும், தோழர் ராஜ் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

    A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

  • BSNLEU-AIBDPA-TNTCWU – இணைந்த CoC சார்பில் ஆத்தூரில் சிறப்புக் கூட்டம்

    BSNLEU-AIBDPA-TNTCWU – இணைந்த CoC சார்பில் ஆத்தூரில் சிறப்புக் கூட்டம்

              18.12.2023 இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் CoCயின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. தோழர். P. குமாரசாமி DOS AIBDPA தலைமை ஏற்றார். தோழர். N. மூர்த்தி BS AIBDPAவின் அஞ்சலியுரைக்குப் பின் தோழர். A. அருள்மணி BS வரவேற்புரை நிகழ்த்தினார்.

                  தோழர் S. தமிழ்மணி DS AIBDPA துவக்க உரையில் ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாடு, பணியில் இருக்கும் ஊழியர் பிரச்சினைகள், ஓய்வூதிய மாற்றத்தில் AIBDPAவின் நிலைபாடு, அரசின் மக்கள் விரோத கொள்கைகள், AIBDPA கிளை மாநாடு, சேலம் மாவட்ட மாநாடு உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைத்தார்.

                தோழர் P. தங்கராஜு ABS AIBDPA, தோழர். சிவந்தன் BS TNTCWU, தோழர். வேல்விஜய் ADS BSNLEU ஆகியோரின் வாழ்த்துரைக்குப் பின் தோழர். S. ஹரிஹரன் ACS BSNLEU நிறைவுரை ஆற்றினார். அவர்தம் உரையில் BSNLEU மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கிக் கூறினார். இறுதியாக, தோழியர் ராணி அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

    தோழமையுள்ள,
    S. தமிழ்மணி DS AIBDPA

  • BSNLEU-AIBDPA-TNTCWU – இணைந்த CoC சார்பில் ஓமலூர் கிளைக் கூட்டம்

    BSNLEU-AIBDPA-TNTCWU – இணைந்த CoC சார்பில் ஓமலூர் கிளைக் கூட்டம்

                    19.12.2023 இன்று ஓமலூரில் CoC சார்பில் கிளைக் கூட்டம் நடைபெற்றது. தோழர். N. கௌசல்யன் BS AIBDPA தலைமை ஏற்றார். தோழர். S. சமரன் BS BSNLEU வரவேற்புரை நிகழ்த்தினார்.

                     தோழர். S. தமிழ்மணி DS AIBDPA துவக்க உரையில் ஒப்பந்த ஊழியர் மாவட்ட மாநாடு, பணியில் இருக்கும் ஊழியர் பிரச்சினைகள், ஓய்வூதிய மாற்றத்தில் AIBDPAவின் நிலைபாடு, அரசின் மக்கள் விரோத கொள்கைகள், AIBDPA கிளை மாநாடு, சேலம் மாவட்ட மாநாடு போன்றவற்றை எடுத்துரைத்தார்.

                 தோழர் E. கோபால் DS BSNLEU அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது உரையில் BSNLEU மத்திய செயற்குழு முடிவுகள், நமது அடுத்த கட்ட இயக்கங்கள் பற்றி கூறினார். தோழர் K. ராஜன் DP TNTCWU அவர்கள் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தார்.

                   தோழர். S.அழகிரிசாமி ADS AIBDPA அவர்கள் மத்திய அரசின் தனியார் ஆதரவுக் கொள்கைகள், தொழிலாளி வர்க்கம் ஆற்றவேண்டிய கடைமைகளை விவரித்தார். தோழர். காட்டுராஜா DOS AIBDPA அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

    தோழமையுள்ள,
    S. தமிழ்மணி DS AIBDPA

  • மிகவும் சிறப்பாக நடைபெற்ற சென்னை மாவட்ட சிறப்புக்கூட்டம்

    மிகவும் சிறப்பாக நடைபெற்ற சென்னை மாவட்ட சிறப்புக்கூட்டம்

     

    வணக்கம் தோழர்களே!
               சென்னை மாவட்ட சங்கத்தின் சிறப்புக் கூட்டம் 20-12-2023 அன்று காலையில் CGM அலுவலக வளாகத்தில் உள்ள BSNLEU அலுவலகத்தில் வைத்து தோழர். என். சாயிராம் மாவட்ட துணைத் தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக அஞ்சலி உறையை தோழர் ஏ. வி. வெங்கடேசன் நிகழ்த்தினார். நிகழ்ச்சி நிரலை விளக்கியதோடு தோழர். டி. கோதண்டம் மாவட்ட செயலாளர் வரவேற்புரை ஆற்றினார்.

                     சிறப்புக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய மாநில செயலாளர் தோழர். ஆர். ராஜசேகர் அவர்கள் மத்திய, மாநில சங்கங்களின் செயற்குழு முடிவுகள், நமது பணிகள் மற்றும் சென்னையில் நடந்து முடிந்த NCCPA அகில இந்திய மாநாடு, அதில் நமது தமிழ் மாநில சங்கத்தின் பங்கு,
    சென்னை மாவட்ட சங்கத்தின் பணி, அதன் முடிவுகள் குறித்து விரிவாக பேசினார். அதேபோல் வரும் டிசம்பர் 25 அன்று வெண்மணிக்கு செல்வது என்ற மாநில சங்கத்தின் முடிவு உட்பட பல்வேறு விசயங்களை விளக்கமாக கூறினார்.

           மாநில தலைவர் தோழர். சி. கே. நரசிம்மன் அவர்கள் பல்வேறு செய்திகளை வாழ்த்துரையாக வழங்கினார். தோழர். டி. ஆதிவராகன், தோழர். டி. விஜயகுமார், தோழர். கே. ஏ. பங்கஜாக்சன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதத்தில் சிறப்பாக பங்கு பெற்றனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது

    1) மாவட்ட செயற்குழுவினை கூட்டி ஜனவரியில் மாவட்ட மாநாடு நடத்துகின்ற வகையில் முயற்சிகளை செய்வது.
    2) மத்திய மாநில சங்கங்களின் முடிவுகளை அனைவருக்கும் அறிக்கையாக வழங்குவது என்று முடிவு செய்து வழங்கப்பட்டது.
    3) NCCPA சென்னை அகில இந்திய மாநாட்டில் வரவேற்புக் குழுவில் சிறப்பாக பணியாற்றிய தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

           கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறுகின்ற வகையில் இறுதியாக தோழர். டி. விஜயகுமார் அவர்கள் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

                       கூட்டத்தில் NCCPA அகில இந்திய மாநாட்டிற்காக கீழ்க்கண்ட தோழர்கள் நன்கொடை வழங்கினார்கள்.

    1) தோழர்.டி.ஜெயகுமார் -ரூபாய் 500/=
    2) தோழர்.எஸ்.தங்கவேல் -ரூபாய்500/=.
    3) தோழர்.ஆத்மச்சரன் -ரூபாய் 500/=.
    4) தோழர்.கே.தாமோதரன் ரூபாய் 500/=.
    5) தோழர்.வெங்கடசுப்புராயலு ரூபாய் 500/=.
    6) ஏ.வி.வெங்கடேசன் ரூபாய் 500/=

    நன்கொடை வழங்கிய அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.

    தோழமையுடன்,
    டி.கோதண்டம், மாவட்ட செயலாளர்,
    AIBDPA,
    சென்னை.
    20-12-2023.